ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் வாட்டிகனில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை ஒட்டி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் போப் ஆண்டவர் லியோ தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது...
இந்தப் பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 குழந்தைகள் பூக்களை ஏந்தி சென்று பேராலயத்தில் உள்ள இயேசு பிறப்பு காட்சியை நோக்கி போப் ஆண்டவருடன் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் சுமார் 6000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதுமட்டுமின்றி தேவாலயத்திற்கு வெளியே இருந்த சதுக்கத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் திரண்டு பலத்த மலையிலும் குடைகளைப் பிடித்து இந்த ஆராதனையை கண்டு களித்தனர்...
இந்த ஆராதனையில் பேசிய போப் ஆண்டவர் லியோ
பூமியில் மனிதனுக்கு இடமில்லை என்றால் கடவுளுக்கும் இடம் இல்லை. எங்கு மனிதனுக்கு இடம் இருக்கிறதோ அங்கு கடவுளுக்கும் இடம் உண்டு. ஒரு மாட்டு கொட்டகை கூட ஒரு கோவிலை விட புனிதமானதாக மாறக்கூடும் என்று தெரிவித்தார்.
மேலும் பல வாரங்களாக மழை காற்று மற்றும் குளிரில் துன்பப்பட்டு வரும் காசா மக்களை குறித்தும் பல்வேறு நாடுகளிலும் உள்ள அகதிகளை குறித்தும் அல்லது நமது நகரங்களிலேயே வீடுகள் இன்றி உள்ள ஆயிரக்கணக்கான மக்களை குறித்தும் நாம் சிந்திக்காமல் இருப்பது எப்படி என தெரிவித்தார். உலகப் பிரச்சனைகள் அனைத்தும் முறையான பேச்சுவார்த்தையால் மட்டுமே முடிவுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்...