தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு 248 கோடி ஒதுக்கீடு

31 December 2025

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை ஒட்டி பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தொடர்ந்து உங்கள் பரிசுத்தொகுப்புகள்  வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான பொங்கல் பரிசு தொகுப்புக்கு தமிழக அரசு சார்பில் 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அந்த வகையில் ஒரு கிலோ பச்சரிசி 1 kg சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது...