பொங்கல் மற்றும் போகி பண்டிகை: பள்ளிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
12 January 2026
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்களுக்குப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகைக்கும் விடுமுறை: ஜனவரி 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக பொங்கல் தினத்திலிருந்து விடுமுறை அளிக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு ஒருநாள் முன்னதாகவே, அதாவது ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்படும் போகி பண்டிகைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் பண்டிகையைத் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று சிறப்பாகக் கொண்டாட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 14 முதல் 18 வரை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் வழக்கம்போலத் திறக்கப்படும்.