அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்த முதலமைச்சர்

01 January 2026

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க 183.86 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 

இது தொடர்பாக இன்று தமிழக அரசு செய்தி குறிப்பில் "தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை எழுச்சியோடு கொண்டாடி மகிழ 2024 -2025 ஆண்டிற்கான மிக ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க 183 கோடியே 86 லட்சம் ரூபாய் நி நிதி ஒதுக்கீடு செய்த முதல் அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி சுமார் ஒன்பது லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள் எனவும் இந்த உத்தரவின்படி சி மற்றும் டி பிரிவை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டும் மிகை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முழு நேரம் மற்றும் பகுதிநேர பணியாளர்கள் ஆகியோருக்கு ஆயிரம் ரூபாய் சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.