விழுப்புரம்: மணல் குவிப்பால் கிராம மக்கள் அவதி

24 October 2025

விழுப்புரம்: மணல் குவிப்பால் கிராம மக்கள் அவதி
விழுப்புரம் அருகே அரசூர் புறவழிச் சாலையில் 50 கோடி செலவில் கட்டப்படும் மேம்பாலப் பணிக்காக அமைக்கப்பட்ட சர்வீஸ் சாலைகள் பழுதடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பள்ளங்களை நிரப்ப பாலம் கட்ட கொண்டுவரப்பட்ட மணல் கொட்டப்பட்டு அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும்போது எழும் புழுதியால் இருவேல்பட்டு கிராம மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் சுவாசிப்பதால்  உடல்நல பாதிப்பை ஏற்படுத்துவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.