குமரி: மீனவர் நலவாரியத்திற்கு புதிய தலைவர் நியமனம்

14 November 2025

தமிழ்நாடு மீனவர் நலவாரிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதியை சேர்ந்த அ.ஜோசப் ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் உட்பட 8 அரசு அதிகாரிகள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 பேர் நியமனம். இந்தப் பதவிக்கான நியமன ஆணையை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.