தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்

25 October 2025

விழுப்புரத்தில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி ஆர்ப்பாட்டம்


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில், தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையிலும், அதை நடைமுறைப்படுத்த திமுக அரசு காலதாமதம் செய்வதை கண்டித்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில செயலாளர் கருஞ்சிறுத்தை கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில துணை செயலாளர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் ராஜேஷ், வடக்கு மாவட்ட செயலாளர் துரை, கிழக்கு மாவட்ட செயலாளர் கண்ணபிரான் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர்.

 -செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்