கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர்
கு.செல்வப்பெருந்தகை , சட்டப்பேரவை பொது கணக்கு குழு உறுப்பினர்கள் மற்றும்
ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் ஆகியோர் (24.11.25) ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரிஷிவந்தியம் ஊராட்சியில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கொற்றவை செய்தியாளர் அ ஐயப்பன்