தமிழகம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சாவூர், சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியுள்ளது.
0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. எனவே இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் பள்ளிகளில் நடைபெறும் இந்த முகாமில் பெற்றோர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.