படித்தது பிளஸ் 2 .பார்த்தது MBBS வேலை. திருப்பூரில் போலி டாக்டர் கைது.

22 November 2025

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள முத்தயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (வயது 50) 
இவர் முத்தையம்பட்டியில் விநாயகா மெடிக்கல் என்ற பெயரில் மருந்து கடை வந்தார்.

இவர் தனது மருந்து கடையில் வைத்து கிராம மக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்ததாக மருத்துவத்துறை இணை இயக்குனருக்கு புகார் வந்தது அதைத்தொடர்ந்து 
மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மீரா.உடுமலை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவி.கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன்.வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீசுகு. குண்டடம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர் 

அப்போது வெள்ளைச்சாமி தனது மருந்து கடையில் மருத்துவர்களை ப்போல பல்வேறு உபகரணங்களை அருகில் வைத்துக்கொண்டு ஒரு வருக்கு வைத்தியம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்.வெள்ளைச்சாமி கையும் களவுமாக பிடித்தனர் பின்னர் அவரிடம் மருத்துவத் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் 

வெள்ளைச்சாமி பிளஸ் 2 வரை படித்து விட்டு கடந்த சில ஆண்டு களாக பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததும் அலோபதி மருந் துகளை கொடுத்து வந்ததும் தெரியவந்தது 

இதைத் தொடர்ந்து குண்டடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான வெள்ளைச்சாமியை கைது செய்தனர் 
மேலும் அவர் நடத்திய மருந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது பிளஸ் 2 வரை படித்துவிட்டு எம் பி பி எஸ் ரேஞ்சுக்கு மருத்துவம் பார்த்து வந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தியது

மா ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்