போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு 15 ஆண்டுகள் சிறை

13 November 2025

13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த N.பஞ்சம்பட்டி பகுதியைச் சேர்ந்த அருள் பிரசாத் (21) என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப அறிவுறுத்தலின்படி சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அமுதா, நீதிமன்ற தலைமை காவலர் விஜயலட்சுமி  மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி  சீரிய முயற்சியால் (13.11.2025) போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி , 
குற்றவாளி அருள் பிரசாத் என்பவருக்கு 15 ஆண்டுகள் மற்றும் 01 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000/-அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்
மேலும் இந்தாண்டு மட்டும் 57 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நிருபர். த. பிரபாகரன்
திண்டுக்கல்