குமரி: விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 1 கிலோ கஞ்சா பறிமுதல். நான்கு பேர் கைது

14 November 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  R.ஸ்டாலின் IPS  கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் பொறுப்பு  டேவிட் ரவி ராஜன்,
உதவி ஆய்வாளர் திலீபன் தலைமையிலான போலீசார்,

மேலகிருஷ்ணன் புதூர் சாலை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ராஜன் என்பவர் மகன் சஞ்சய்ராஜன்(19) 
தம்மத்து கோணம், வளர் நகர் பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மகன் அஸ்வின்(23)மயிலாடி, மயிலாடி புதூர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மகன் விஜய் (20) பணகுடி முத்துசாமிபுரம் பகுதியை சேர்ந்த வெற்றிவேல் முருகன் என்பவரின் மகன் கதிர் (21)
 ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர்.சோதனையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.