குமரி: குளச்சலில் பஸ்ஸிலிருந்து கண்டக்டரை தள்ளிய போதை ஆசாமி கைது
17 November 2025
குளச்சலில் இருந்து நேற்று முன்தினம் இரவு குறும்பனை செல்லும் பஸ்ஸில், மதுபோதையில் ஏறிய ராஜன் (56) என்பவர், கண்டக்டர் பிஜிலிகர் (44) டிக்கெட் எடுக்க கூறியபோது தகராறில் ஈடுபட்டு அவரை பஸ்சில் இருந்து கீழே தள்ளியதில் படுகாயமடைந்தார். பிஜிலிகர் குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குளச்சல் போக்குவரத்து டிப்போ ஊழியர்கள் கண்டக்டரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர். குளச்சல் போலீசார் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து ராஜனை நேற்று கைது செய்தனர்.