மழை நீர் தேக்கம் - சாலை மறியல்

25 October 2025

மழை நீர் தேக்கம் - சாலை மறியல் முயற்சியை தடுத்த போலீசார்


விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டு, அனிச்சம் பாளையம் ரோடு, லஷ்மி நகர் விரிவு, ராகவேந்திரா தெரு, பாரதி மெயின் தெரு, மீன் மார்க்கெட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழையால் மழை நீர் மற்றும் கழிவு நீர் கலந்து வீதிகளில் தேங்கி, மக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேடு பரவலாக உள்ளதாகவும், நகராட்சியிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
 இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அவர்களை போலீசார் தடுத்து, நகராட்சி ஆணையரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் களைந்து சென்றனர்.
 இதனால் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.