206 பேர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குப்பதிவு

22 October 2025

206 பேர் மீது விழுப்புரம் மாவட்டத்தில் வழக்குப்பதிவு
விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளியையொட்டி, போலீசார் கடந்த 19ஆம் தேதி இரவு முதல் 20ஆம் தேதி இரவு வரை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
மது போதையில் வாகனம் ஓட்டுதல், ஓவர் லோடு, ஹெல்மெட் அணியாமல் சென்றது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்ட 206 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதில் மது போதையில் வாகனம் ஓட்டிய 32 பேரின் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இந்த தீபாவளியன்று பட்டாசு வெடித்தல் விதிமீறல் வழக்கில் யாரும் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்.