காரைக்குடியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
18 October 2025
"கரூர் சம்பவத்தில் விஜய் மீது குற்றமா? ஆளும் கட்சி மீது குற்றமா? என்பது சிபிஐ விசாரணைக்குப் பின்பு தெரிய வரும்". - காரைக்குடியில் பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற தேர்தல் பிரச்சார பயணத்தினை இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மேற்கொண்டார். தொடர்ந்து காரைக்குடி நெசவாளர் காலர்னியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, கரூர் சம்பவத்தில், மதுரை உயர்நீதிமன்றம் உள்ள போது எப்படி சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் உயிரிழந்த 41 பேரின் உடற்கூறு செய்தது குறித்து உச்ச நீதிமன்ற எழுப்பிய கேள்விகள் தமிழக அரசுக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கரூர் சம்பவம் நடைபெற்றதை அறிந்து நானும், எடப்பாடி பழனிச்சாமியும் தேசிய கூட்டணி சார்பில் அன்றே சிபிஐ விசாரணை கோரினோம். இன்று உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்து தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும் விசாரணையில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து தக்க தண்டனை வழங்குவார்கள் என்று நம்புகிறோம். திமுக ஆட்சியில் வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பிற்கு போகாத முதல்வர் இரவோடு இரவாக கரூரில் 41 பேர் நசுக்கி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு சென்றதும், இரவோடு இரவாக உடற்கூறு ஆய்வு செய்து, உடலை எரிக்க, புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது. கரூர் சம்பவத்தில் விஜய் மீது குற்றமா? ஆளும் கட்சி மீது குற்றமா? என்பது சிபிஐ விசாரணைக்கு பின்பு தெரிய வரும் என்றவர், எனது தேர்தல் பிரச்சாரத்தில் ஈபிஎஸ் ஏதாவது ஒரு கூட்டத்தில் பேசுவார். மேலும் பாஜக பேசிய தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக நயினார் நாகேத்திரன் தெரிவித்தார். செய்தியாளர் s.கல்கீஸ்வரன்