பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் இந்தியாவில் பல மாநிலங்கள் சமூக நீதியை பாதுகாப்பதற்காக ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ள நிலையில் திமுக அரசு மட்டும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நடப்புபத்தாண்டின் முதல் பாதை சமூக நீதிக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்று வர்ணிக்கும் வகையில் பல மாநிலங்கள் ஜாதி வரி
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன.
எனவே தமிழ்நாட்டில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாத திமுக அரசை கண்டித்தும் உடனடியாக ஜாதி வாரிய மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் திடல் அருகில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்திற்கு தான் தலைமை ஏற்பதாகவும் சமூக நீதியில் அக்கறை கொண்டு இந்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் அனைத்து நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளனர் என்பதையும் இன்று தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்...