பாஜக நல்லாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது: பிரதமர்

20 December 2025

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் இன்று பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்ற இருந்தார். 

இந்த நிலைமையில் மோசமான வானிலை காரணமாக அவரால் அந்த இடத்தை சென்று அடைய முடியாத காரணத்தால் அவர் வீடியோ கான்ஃபரன்ஸ்ங்கில் உரையாற்றினார். 

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பிரதமர் மேற்கு வங்க மாநிலத்தின் ஏழை மக்களை கொள்ளையடித்து மாநிலத்தில் பயங்கரவாதத்தை பரப்பி நமது பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களைச் செய்யும் ஊடுருவக்காரர்களை திரிணாமுல் காங்கிரஸ் தனது முழு பலத்துடன் பாதுகாக்கிறது. மேற்கு வங்க மக்களுக்கு எனது வாக்குறுதி, மாநிலத்தில் பாஜக அரசு அமைந்த உடன் ஊடுருவக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் பாஜக நல்லாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள பிரதமர் திரிணாமுல் காங்கிரஸ் பணம் மற்றும் கமிஷனை பற்றி மட்டுமே சிந்திக்கின்றது என தெரிவித்துள்ளார்.