பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜோடான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இதன் முதல் கட்டமாக நேற்று ஜோர்டான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்ற அவர் அந்நாட்டின் மன்னர் அப்துல்லா முன்னிலையில் நடைபெற்ற இந்தியா ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார்.
இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இன்று எத்தியோப்பியா சென்றடைந்தார். அங்கு இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து அந்நாட்டு பிரதமர் அபி அகமது அலியுடன் பிரதமர் பேச்சுவர்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமன் நாட்டிற்குச் செல்ல உள்ளார்....