செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகளைப் பறிக்குமா? இளைஞர்களின் கவலைக்கு பிரதமர் மோடி பதில்
17 February 2026
டெல்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற 'இந்தியா ஏஐ இம்பாக்ட் (India AI Impact) உச்சி மாநாடு 2026' நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் குறித்து இளைஞர்களிடையே நிலவும் முக்கிய கவலைகளுக்குப் பதிலளித்தார். ஏஐ தொழில்நுட்பம் வேலைவாய்ப்புகளைப் பறித்துவிடும் என்ற அச்சத்தைப் போக்கிய பிரதமர், மாறாக இது புதிய வாய்ப்புகளை உருவாக்கும் கருவியாக அமையும் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, தரவு மையங்கள் (Data Centres) இளைஞர்களுக்குப் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இடங்களாக மாறும் என்றும், உலகின் ஒட்டுமொத்த தரவுகளும் (Data) இந்தியாவில் சேமிக்கப்படுவதற்கான சூழலை உருவாக்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக உருவெடுப்பதில் இன்றைய இளைஞர்களின் திறமைக்கும், ஏஐ போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்று குறிப்பிட்ட பிரதமர், தொழில்நுட்ப வளர்ச்சியைப் பொறுப்புணடனும் பாதுகாப்பாகவும் கையாள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.