ஏழு தலைமுறையை கண்ட மூதாட்டிக்கு 101.வது வயது பிறந்தநாள் கொண்டாட்டம்.

10 November 2025

ஏழு தலைமுறையை கண்ட மூதாட்டிக்கு 101.வது வயது பிறந்தநாள் கொண்டாடிய ஏழு தலைமுறையினர்.
 திருப்பூர் ஜீவா காலனியை சேர்ந்தவர் ராமாத்தாள் இவரது 101.ன்னாவது. பிறந்தநாள் 9-11-2025.அன்று ஒரு தனியார் அரங்கில் குடும்பத்தினர்கள் கோலாகலமாக கொண்டாடினார்கள்.  இதில் ராமாத்தாளின் மகள் அவர் வழி குடும்பத்தினர்கள் ராமாத்தாளின் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் பேரன்,  பேத்திகள் கொள்ளுப்பேரன்,  கொள்ளுப் பேத்திகள்,  எள்ளுப்பேரன் எள்ளுப் பேத்திகள் என உறவினர்கள் 100.க்கும் மேற்பட்டவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்து ராமாத்தாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர். 
இது குறித்து 101.வது பிறந்தநாள் கொண்டாடிய ராமாத்தாள் கூறும்போது,7.தலைமுறைகளை கண்டது மகிழ்ச்சியளிக்கிறது அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியோடும் உடல் ஆரோகியத்தோடும் வாழ வேண்டும் இந்த சமூதாயத்திற்கு நல்லது செய்ய வேண்டும் இறைவன் அவர்களுக்கும் நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும் என்றார்.


மா.ஜாபர்அலி செய்தியாளர் திருப்பூர்