கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று கேரளாவின் 69 வது உதய தினத்தை முன்னிட்டு சட்டசபையில் ஒரு நாள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் இந்தியாவிலேயே தீவிர வறுமை ஒழிப்பை அறிவித்த முதல் மாநிலம் கேரளா என்பதில் பெருமை கொள்வோம் என தெரிவித்தார். மேலும் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் என்பது ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தேசிய இயக்கத்தால் எழுப்பப்பட்டது என தெரிவித்தார். மேலும் இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் கேரளா தீவிர வறுமை ஒழிப்பு மாநிலமாக அறிவிக்கும் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான அரசியல்வாதிகள், அமைச்சர்கள் மற்றும் பிரபல நடிகர்கள் கலந்து கொண்டனர்.