பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட பெங்ஷன் புயல் காரணமாக அந்த நாட்டின் லூசன், மிண்டனோ, க்யூசன் மாகாணம், பிடகோ நகரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையானது கொட்டி தீர்த்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது நிலையில் இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் மாயமாகியுள்ளனர். இந்த புயல் மற்றும் வெள்ளத்தின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலை மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து பேர பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் கனமழையானது மேலும் தொடரும் என்று வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது....