கும்பகோணம் நகராட்சிக்கு சொந்தமான மூர்த்தி கலையரங்கம் இப்போது யார் பொறுப்பில் ? - மக்கள் கேள்வி

07 July 2021


கும்பகோணம் பொற்றாமரை குளம், மேற்கு காவல் நிலையம், பின் புறம் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடம் யார் பொறுப்பில் ?உள்ளன யார் பராமரிப்பு நகராட்சிக்கு இதனால் என்ன பயன்? இதில் யார் தொகை வாங்கிகொண்டு அப்போதைய நகராட்சி அதிகாரிகள், தனியார் ஒப்பந்தக்காரர் இதில் அடங்கியுள்ளனர்? நகராட்சிக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள இடம் யாருக்கு ? ஒப்பந்தம் ஆகி உள்ளார்களா?
 இடம் கொடுக்கப்பட்டபோது
 எந்த ஆவணத்தில் , எப்படி , விவரங்கள்? இதில் என்னவென்றால் நகராட்சி வேற இடமாக இருந்தால் அதற்கு கொரானா நேரத்திலும் வாடகை வசூல் செய்துள்ளனர் .

ஆனால் இந்த இடத்திற்கு எவ்வித வாடகையும் கிடையாது, இதற்கு யார் யார் பொறுப்பு ? நகர்ச்சிக்கு இதனால் என்ன பயன் ? அப்போதைய அரசும், நகராட்சி அதிகாரிகளும், என்ன செய்தார்கள்? 
இதில் அதிமுக முன்னாள் எம் எல் ஏ , தொழில் அதிபராகளுக்கும் பங்கு உள்ளன தனியார் ஒப்பந்தக்காரரும் அடங்கும்.

இதனை தனியாரிடமிருந்து மீட்க சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் ஆர்வம் காட்டி உள்ளனர்.

 
கோ வளங்கோவன் கும்பகோணம்