திமுக தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த கோரி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

12 November 2025

திமுக அரசு கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...


திமுக அரசு கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் பொழுது அளித்த வாக்குறுதிகளின்படி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் மாவட்டத் தலைவர் அய்யா மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் பாபு அண்ணன் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்...

இரா.வெங்கடேசன்,  சப்எடிட்டர் கொற்றவை நியூஸ்