மது போதையில் பணம் பறிக்கும் முயற்சியில் படுகொலை.

28 November 2025

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை சேர்ந்தவர் பசுபதி (வயது 60).இவர் தாராபுரம் பத்மாவதி நகரில் உறவினர் ஒருவர் இறந்துவிட்டார் அதற்காக துக்கம் விசாரிப்பதற்காக வாடிப்பட்டியில் இருந்து பசுபதி தாராபுரம் வந்துள்ளார். துக்கம் விசாரித்து விட்டு ஊர் திரும்புகையில் தாராபுரத்தில் உள்ள மதுபான கடையில் மது வாங்கி அருந்தி உள்ளார் பசுபதி.
அதே பகுதியில் உள்ள யாசர் அரஃபாத் என்ற நபரும் அங்கு மது அருந்தியுள்ளார் யாசர் அரபாத் பசுபதியிடம் சென்று என்னிடமும் ஒரு மது பாட்டில் உள்ளது அதை அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று இருவரும் ஜாலியாக அருந்தலாம் என்றுகூறி பாரில் இருந்து பசுபதியை காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு சென்றவுடன் பசுபதியிடம் இருக்கும் பணத்தை பறிக்க யாசர் அரபாத் முயன்ற போது அவர் கொடுக்க மறுத்துள்ளார் இதனால் பசுபதியை யாசர் அரபாத் தாக்கியுள்ளார். இதன் காரணமாக பசுபதியின் கழுத்து எலும்பு உடைந்து அவர் மயக்கம் அடைந்துள்ளார். பசுபதி இடமிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு யாசர் அரபாத்து அங்கிருந்து சென்று விட்டார் காட்டில் மயங்கி கிடந்த வரை பார்த்த பலர் காவல் துறைக்கு தகவல்
கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் பசுபதியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்பு மேல் சிகிச் சைக்காக திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 
இது குறித்து வழக்கு பதிவு செய்து பசுபதி யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர் இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி பசுபதி இறந்து விட்டார் இதனால் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரபடுத்தியவர்கள் பசுபதி மயங்கி கிடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர் அதில் யாசர் அரப்பாத்தும் பசுபதியும் சேர்ந்து செல்வது தெரிய வந்தது இதன் காரணமாக  யாசர் அரபாத்தை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல்கள் வெளியாகின . மேலும் யாசர் அரபாத் மீது 2 வழக் குகள் நிலுவையில் உள்ளதாகவும் காவல்துறையினரால் தெரிவிக்கப் பட்டுள்ளது. மதுரையில் இருந்து துக்கம் விசாரிக்க தாராபுரத்துக்கு வந்த முதியவரை மது போதையில் வாலிபர் ஒருவர் அடித்துக் கொன்றதால் தாராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்