முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்திய விஜய்

30 October 2025

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பிறந்த நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று முத்துராமலிங்க தேவர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான கலந்து கண்டு முத்துராமலிங்க தேவர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினா்.