கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி வார்டு எண்-30 சாந்தி நகரில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டம் (2023- 2024) கீழ் 38 லட்சம் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன் உள்ள பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வராமல் பூட்டி வைத்துள்ளனர்.
பூங்கா அமைக்கப்பட்ட சில நாட்கள் செயல்பாட்டில் இருந்தது. தற்போது பூட்டி போட்டுள்ளனர். நகராட்சி சார்பில், பராமரிப்பும் இல்லை. பயன்பாட்டில் இல்லாததால், பூங்கா முழுவதும் முட்புதர் மண்டி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
பூங்காவை பராமரிப்பு செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் மேட்டுப்பாளையம் S.அம்பிகா