 
	 
								சதுப்பு நிலப்பகுதியில் 1400 குடியிருப்புகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்கியது சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தரப்பில் சதுப்பு நிலத்தில் எல்லையை துல்லியமாக தீர்மானிப்பது குறித்த ஆய்வு பணிகள் இரண்டு வாரங்களில் முடிவடையும் எனவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டப்படும் கட்டிடத்திற்கு சுற்றுச்சூழல் தாக்கல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றம் சதுப்பு நில பகுதியில் குடியிருப்பு கட்டும் பணிகள் மேற்கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நவம்பர் 12ஆம் தேதிக்குள் இந்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.