ஜம்முவில் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 2 பாகிஸ்தான் கைதிகள் தப்பியோட்டம்
17 February 2026
ஜம்முவின் ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள சிறார் சீர்திருத்தப் பள்ளியில் (Observation Home) அடைக்கப்பட்டிருந்த இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட மூன்று கைதிகள், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். திங்கள்கிழமை மாலை சுமார் 5:15 மணியளவில் நடந்த இந்தத் துப்பாக்கிச் சூட்டில் வினய் குமார் மற்றும் பிரவீன் குமார் ஆகிய இரண்டு போலீசார் காயமடைந்தனர்; அவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தப்பியோடியவர்களில் கரண்ஜீத் சிங் என்ற உள்ளூர் ரவுடியும், முகமது சனாவுல்லா மற்றும் அஹ்சன் அன்வர் ஆகிய இரண்டு பாகிஸ்தானியர்களும் அடங்குவர். பலத்த பாதுகாப்பு நிறைந்த இப்பகுதியில் கைதிகளுக்குத் துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தப்பியோடியவர்களைப் பிடிக்க எல்லைப் பகுதிகளில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.