பாகிஸ்தானில் அவ்வப்போது பயங்கரவாத அமைப்புகள் பாதுகாப்பு படையினரின் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெக்ரிக் ஈ தளிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகின்றது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தாலிபான்களின் கிளை அமைப்பாகும். இந்நிலையில் கைபர் பத்துவா மாகாணம் பனு மாவட்டத்தில் வாரிஸ்தான் அருகே தெக்ரிக் இ தாலிபான் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நேற்று அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் அந்த பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் 22 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.