பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் செயல்ப செயல்பட்டு வரும் தெஹ்றிக் இ தாலிபான் அமைப்பு அவ்வப்போது பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது.
நிலையில் இன்று கைபர் பக்துவா மாகாணம் மிரண்ஷா பகுதியில் உள்ள அரசு அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஷா வாலி இன்று தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடைய கார் பனு பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவரது காரை இடம் மறைத்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ஷா வாலி மற்றும் காரில் இருந்த இரண்டு போலீசார் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த பயங்கரவாதிகள் தப்பி ஓடிவிட்டனர். இந்த நிலையில் பாதுகாப்பு படையினர் நான்கு பேரின் உடல்களையும் ஈட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பயங்கரவாதிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்...