பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஹை கோர்ட் வெளியே இன்று திடீரென குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 12 பேர் பலியாகி உள்ளனர் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இது ஒரு தற்கொலை தாக்குதலாக இருக்க கூடும் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.