பாகிஸ்தான் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
24 January 2026
பாகிஸ்தானின் வடமேற்கே அமைந்துள்ள கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திருமண நிகழ்வின் போது அங்கு அமைதி குழு ஒன்றின் உறுப்பினர்கள் தங்கியிருந்த நிலையில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்களில் 4 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி முகமது அட்னான் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், பாகிஸ்தானிய தலிபான் அமைப்பு (TTP) இதனைச் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.