வெள்ளம் மீட்பு பணியில் கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை.

22 October 2025

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. R. ஸ்டாலின் IPS அவர்கள் உத்தரவின்படி தொடர் மழை, வெள்ளம் மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிப்பு நேரிட்டால் ஆபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படை வெள்ளம் மீட்பு பயிற்சி பெற்ற மாவட்ட காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் தயார் நிலையில் உள்ளனர்.அந்த குழுவினரையும் வெள்ள மீட்பு உபகரணங்களையும் இன்று 22–10–2025 ஆம் தேதி மாவட்ட ஆயுதப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய என் *100* அல்லது *7010363173* எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.