உலக சுகாதார அமைப்பின் தரநிலைகளை பூர்த்தி செய்யாத எந்த ஒரு ஓ ஆர் எஸ் கரைசலையும் பயன்படுத்தக்கூடாது என்று உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் தொடர்ந்த இந்த வழக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதுமட்டுமின்றி கடந்த எட்டு ஆண்டுகளாகவே மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் சமூக வலைதளம் மூலமாக இந்த ஓ ஆர் எஸ் கரைசல் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் சரியான அளவில் இல்லாத ஓஆர்எஸ் கரைசலை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் உணர்வு பூர்வமாக பேசிய மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ் எனது எட்டு ஆண்டு கால போராட்டம் வென்று விட்டது. இனி யாரும் தவறான லேபிளில் ஓ ஆர் எஸ் கரைசலை விற்க முடியாது. இதற்கு தன்னுடன் இருந்து ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துள்ளார்.