அ.தி.மு.க.வில் மீண்டும் இணைவது குறித்த ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து
27 January 2026
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதே தற்போதைய தலையாய கோரிக்கை என்றும், அதுவே தனது விருப்பம் என்றும் தெரிவித்தார்.
அப்போது, "நீங்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்புள்ளதா?" என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "அது ஆண்டவன் கையில் உள்ளது" என்று அவர் பதிலளித்தார். மேலும், கூட்டணி குறித்து டி.டி.வி.தினகரன் உள்ளிட்ட யாரும் இதுவரை தன்னுடன் பேசவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.