முதலிபாளையம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழுவினர் மக்களோடு இனைந்து தங்கள் பகுதியில் மாநகராட்சி சார்பில், குப்பை கொட்டுவதை கண்டித்து பல்வேறு வகையிலான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக
முதலிபாளையம் பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர்கள் திரண்டு, பாடை கட்டும் போராட்டம் நடத்தினர். தென்னை ஓலையில் பாடை கட்டி, குப்பை கழிவுகளால் மாசடைந்து விஷமாக மாறிய நீரை பாட்டிலில் அடைத்து, பாடையில் வைத்து, தாரை தப்பட்டை அடித்து, சமுதாய நலக்கூடம் அருகே கொண்டுவந்து வைத்தனர்.
பெண்கள் அனைவரும் சுற்றி நின்று, 'தண்ணீரெல்லாம் கெட்டுப் போச்சே; மாடு கன்னு செத்துப் போச்சே' என ஒப்பாரி வைத்தனர். தொடர்ந்து கிராம சபாவை புறக் கணித்து சென்றனர். இதனால், மூன்றாவது முறையாக கிராமசபா ஒத்திவைக்கப்பட்டது.
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்