பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது போலீசில் புகார்
26 November 2025
சிதம்பரத்தில் இயங்கும் பிளிப்கார்ட் இகார்ட் பார்சல் டெலிவரி நிறுவனம் வாடிக்கையாளரிடம் ஆபாச வார்த்தையில் திட்டி உள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் கஞ்சி தொட்டி முதல் புவனகிரி வழியில் புறவழிச் சாலையில் இயங்கும் பிலிப்கார்ட் மற்றும் இகார்ட் டெலிவரி அலுவலகம் இயங்கி வருகிறது,
இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட் இணையதளத்தில் தங்களுக்கு தேவையான உபயோக பொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்கள் ஆர்டர் செய்து வீட்டிற்கு டோர் டெலிவரி ஊழியர்கள் மூலம் செய்யப்படுகிறது. இதில் சில சமயம் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் டெலிவரி செய்யாமல் தானாகவே கேன்சல் செய்யும் டெலிவரி ஊழியர்கள். இது பல முறை நடைபெறுவதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் நேரில் அலுவலகத்தில் சென்று கேட்டால் வாடிக்கையாளரிடம் தரக்குறைவாக கவெளியே போ நீ யார் என்று கேட்டும் ஆபாச வார்த்தையையும் உபயோகப்படுத்தியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதனால் வாடிக்கையாளர்கள் பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்ய பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
இது வருங்காலங்களில் நடைபெறாமல் இருக்க பிளிப்கார்ட் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்ளுமா?