ஓமனில் நடந்த மருத்துவ அதிசயம்..!

02 December 2025

கருவுற்ற பெண் பரிசோதனைக்காக மருத்துவரிடம் வந்தார். ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர், ஆண்- பெண் என இரட்டைக் குழந்தைகளை கருவுற்றிருப்பதாகவும், இதில் ஆண் குழந்தைக்கு பிரச்சனை இருப்பதாகவும் பிறப்பதற்கு முன்னர் அல்லது  பின்னர்  உயிரிழப்பதற்கு அதிக சாத்தியம் இருப்பதாக பெற்றோர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. 
ஆனால் பிரசவ வலி தாமதமானது. அதனால் சிசேரியன் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. சிசேரியன் செய்து குழந்தையை வெளியில் எடுக்கும் போது பிரசவ வலி தாமதத்துக்கான காரணத்தை மருத்துவர்கள் புரிந்து கொண்டனர்.  அந்த காட்சி மருத்துவர்களை திகைக்க வைத்தது, குழப்பத்திலும் ஆழ்த்தியது. ஏனெனில் அந்த பெண்சிசு, சிக்கலுக்குரிய ஆண்சிசுவின் கையை பற்றிப் பிடித்தபடி இருந்தது. பிரசவத்தின் போது தனியாக விட்டுவிடக்கூடாது, ஒன்றாகவே வெளியாக வேண்டும் என்பதற்காக சகோதரனின் கையை பற்றிப் பிடித்த படி அவர்கள் ஒன்றாகவே வெளிப்பட்டனர். 
அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் விவரித்தார், பெண்சிசு அப்போது தனது சகோதரனை பிடிக்கவில்லை என்றால், அது முன்பே பிறந்திருக்கும். அதனால் அப்போது அது உயிரிழந்திருக்கவும் செய்யலாம்... 
இறையருளால்  இப்போது இரு குழந்தைகளும் நன்றாகவே வளர்ந்து வருகின்றனர். ஆண்டவன் பெண்மையை படைத்தான், அதனுடன் கருணையையும் சேர்த்தே படைத்தான்..

--PS Parthi