திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செம்பட்டி அருகில் உள்ள போடிக்காமன்வாடி கிராமத்தில் உள்ள குளக்கரையில் பனைவிதை நடும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சுற்றுசூழல் பாசறை மாநில துணை செயலாளர் இலட்சுமணன் தலைமை தாங்கினார், உடன் ஆத்தூர் (திண்டுக்கல்) வேட்பாளர் சைமன் ஜஸ்டின் மற்றும் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்துரு மற்றும் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு 500 பனைவிதை களை நடவு செய்தனர்.
நிருபர். த. பிரபாகரன்
திண்டுக்கல்