வடகொரியாவின் அடுத்த வாரிசாக உருவெடுக்கும் கிம் ஜு ஏ

14 February 2026

வடகொரியாவின் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள் கிம் ஜு ஏ, அந்த நாட்டின் அடுத்த உயரிய தலைவராகப் பொறுப்பேற்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


சமீபகாலமாக ஏவுகணை சோதனைகள், ராணுவ அணிவகுப்புகள் மற்றும் முக்கிய அரசு விழாக்களில் கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் ஒரு நிழல் போலத் தொடர்ந்து வருவது இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

குறிப்பாக, நாட்டின் முக்கிய ராணுவத் தளபதிகள் இச்சிறுமிக்குத் தலைவணங்கி மரியாதை செலுத்தும் புகைப்படங்கள் வெளியாகி உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. 1948-ல் வடகொரியா உருவானது முதல் இன்றுவரை கிம் குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே அதிகாரத்தில் இருந்து வரும் நிலையில், ஆணாதிக்கம் நிறைந்த அந்த நாட்டு அரசியலில் ஒரு பெண் தலைவராக கிம் ஜு ஏ உருவெடுப்பது ஒரு வரலாற்று மாற்றமாகக் கருதப்படுகிறது.


அவருக்குத் தற்போது தீவிர அரசியல் மற்றும் ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் வடகொரியாவின் எதிர்கால அதிகாரம் ஒரு பெண் வாரிசின் கைகளுக்குச் செல்வது ஏறத்தாழ உறுதியாகி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.