பாஜக தேசிய செயல் தலைவர் தமிழகம் வருகை

10 January 2026

பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்று தமிழகம் வருகை தந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு, தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பாஜக தேசிய செயல் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, நிதின் நபின் தமிழகம் வருவது இது 2-வது முறையாகும்.



கோவையில் நாளை நடைபெறவுள்ள பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் நிதின் நபின் பங்கேற்கிறார். இந்த முக்கியக் கூட்டத்தில் பவ்வேறு  விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது

குறிப்பாக மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான உத்திகள்.
வேட்பாளர் தேர்வு, தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காணுதல், கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்துதல் மற்றும் பலப்படுத்துதல்.
தேர்தல் கூட்டணி தொடர்பான முக்கிய முடிவுகள் குறித்த பல்வேறு ஆலோசனைகள் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவின் இந்த மையக்குழு கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.