மழைக்காலம் என்றாலே முதலில் நாம் அச்சப்படுவது காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்காக தான். மழைக்காலத்தில் பல்வேறு நோய்கள் நம்மை பாதிக்கும் போதிலும் ஒரு சில பிரச்சினைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள பல வழிகள் உள்ளன. குறிப்பாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பல்வேறு கசாயம் மற்றும் மூலிகை குடிநீர் உள்ளிட்டவற்றை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதில் குறிப்பாக நிலவேம்பு கஷாயம் என்பது காய்ச்சலை நன்றாக குறைக்கும் தன்மை வாய்ந்தது குறிப்பாக இது வைரஸ் தொற்றுகளுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை நமக்கு அளிக்கும். மேலும் இந்த நிலவேம்பு கஷாயத்தை நாம் அவ்வப்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமல்லாமல் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவிகரமாக இருக்கும். நிலவேம்பு கஷாயம் பருகியும் காய்ச்சல் குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியம்..