நைஜீரியாவில் லாரி கவிழ்ந்து விபத்து: 30 பேர் உயிரிழப்பு

09 February 2026

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் கானோ மாகாணத்தில் உள்ள குவானர் பார்டே நெடுஞ்சாலையில், பயணிகளையும் சரக்குகளையும் ஏற்றிச் சென்ற டிரெய்லர் லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.


இந்த விபத்தில் படுகாயமடைந்த பலரை மீட்புப் படையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்; அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. அதிவேகமாகச் சென்றதே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், நைஜீரியாவில் நிலவும் மோசமான சாலைக் கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாததே இதுபோன்ற தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.