நைஜீரியாவில் சோகம்: படகு கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழப்பு
04 January 2026
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் நிகழ்ந்த கோரமான படகு விபத்தில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் யொபி (Yobe) மாகாணத்தில் உள்ள யொபி ஆற்றில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 'கர்பி' நகரில் செயல்படும் சந்தைக்குப் பொருட்களை ஏற்றிக்கொண்டு, சுமார் 52 பயணிகளுடன் ஒரு படகு நேற்று இரவு சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக படகு நிலைதடுமாறி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் மூழ்கினர்.
இதுவரை இந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர், ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த 13 பேரை பத்திரமாக மீட்டனர்.
தற்போது வரை 14 பேர் மாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.