நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி

23 January 2026

ராய்ப்பூரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ரச்சின் ரவீந்திரா (44) மற்றும் மிட்செல் சான்ட்னர் (47*) ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு, இஷான் கிஷன் (32 பந்துகளில் 76 ரன்கள்) மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் (37 பந்துகளில் 82* ரன்கள்) ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை எளிதாக்கியது. இறுதியில் 15.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 209 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் 28 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.