குமரி: சுசீந்திரம் தாணுமாலையார் கோவில் தெப்பக்குளம் சுவர் சரிவு பொதுமக்களில் அச்சம்.
13 November 2025
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலைய சுவாமி திருக்கோவில் தெப்பக்குளம் பகுதியில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், அந்தப் பணி சரியான திட்டமிடல் இன்றியும் ஒழுங்கின்மையுடனும் நடைபெறுவதால், தெப்பக்குளத்தின் பக்கவாட்டு சுவர் ஒன்று சரிந்து விழுந்தது.
இதனால், அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு மக்கள் மழை பெய்தால் நிலச்சரிவு அல்லது நீர் ஊடுருவல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் நிர்வாகம் விரைவாக சுவரை பழுதுபார்த்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.