களமருதூரில் புதிய காவல் நிலையம் திறப்பு...

22 December 2025

களமருதூரில் புதிய காவல் நிலையம் திறப்பு...


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தில் 37 கிராமங்களை உள்ளடக்கிய புதிய காவல் நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்....


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட களவனூர், ஆதனூர், கூவாடு உட்பட 8 கிராமங்களையும் திருநாவலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட களமருதூர், எம்.குன்னத்தூர், நத்தாமூர், கிளியூர் உட்பட 29 கிராமங்களையும் பிரித்து மொத்தம் 37 கிராமங்களை உள்ளடக்கிய களமருதூர் புதிய காவல் நிலையம் இன்று திறக்கப்பட்டது புதிதாக திறக்கப்பட்ட களமருதூர் காவல் நிலையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இன்று காலை திறந்து வைத்தார். புதியதாக திறக்கப்பட்ட களமருதூர் காவல் நிலையத்திற்கு 2 உதவி ஆய்வாளர்கள் 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 18 காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். களமருதூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருநாவலூர் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி திமுக ஒன்றிய செயலாளர் முருகன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி களமருதூர் காவல் நிலையத்தை இன்று முதல் செயல்படும் வகையில் தொடங்கி வைத்து இனிப்புகள் வழங்கினர்....


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்