டெல்லியில் புதிய வளாகத்திற்கு மாற்றப்பட்ட பிரதமர் அலுவலகம்: 'சேவா தீர்த்' இன்று முதல் செயல்பாட்டிற்கு வந்தது

14 January 2026

தலைநகர் டெல்லியில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 'சென்ட்ரல் விஸ்டா' மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம், துணை ஜனாதிபதி இல்லம் மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட நவீன கட்டமைப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.


நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கடந்த 78 ஆண்டுகளாக, நாட்டின் பிரதமர் அலுவலகமானது குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அருகில் உள்ள தெற்கு வளாகத்தில் (South Block) செயல்பட்டு வந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளுடன் புதிய பிரதமர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், வட மாநிலங்களில் மகர சங்கராந்தி திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும் இன்றைய நன்னாளில், பிரதமர் அலுவலகம் 'சேவா தீர்த்' என்று பெயரிடப்பட்டுள்ள புதிய வளாகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டு, அங்கிருந்து தனது பணிகளைத் தொடங்கியுள்ளது.